யாழ்பாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடுகளில் போதைக்கு அடிமையானவர்கள் இரவு நேரங்களில் ஒன்றுகூடி போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
யாழ். நகர் பகுதி, மற்றும் புறநகர் பகுதிகளில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடுகளில் தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் போதைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதால் பிரதேசவாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடுகளை
பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் , அங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள் ஊசி மூலம் போதைப்பொருளை உட்செலுத்தி வருகின்றனர்.
இதனால் ஏற்படும் கிருமி தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதற்கமைய, யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில்
அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் உட்செலுத்தி வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் போதைக்கு அடிமையானவர் எனவும் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் உறுதிசெய்யபட்டுள்ளது
தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் நேற்றைய தினம் உயிரிழந்தார்
அதனை தொடர்ந்து இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில் , உடலில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர்.
இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில், உடலில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.