யாழ்ப்பாணம் – ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் பயன்படுத்தும் அறையில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 11 ம் திகதி ஊரெழுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மறுநாள் 12 ம் திகதி இரவு ஊரெழு கிழக்கு பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்தும் அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மரணம் தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கும் போது, குறித்த நபர் போதைவஸ்துப் பழக்கத்திற்கு அடிமையாகியவர் என அறியக் கிடைக்கும் நிலையில் அளவுக்கு அதிகமாக போதை ஊசி ஏற்றிய நிலையில் உயிரிழந்தாரா? என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
எனினும் குறித்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
துரைவீதி இணுவிலைச்சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான தங்கராசா – உசாந்தன் (36 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.