வட பகுதியில் மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை சடுதியான அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மாணவர்களிடம் பரவி இருப்பதை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுவர் பிரிவினரின் ஏற்பாட்டில் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொடர்ச்சியாக விசேட விழிப்புணர்வு செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் குறித்த செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நேற்று காலை 9.30மணிக்கு வித்தியானந்த கல்லூரியில் சிறப்புற இடம்பெற்றது.
குறித்து செயலமர்வின் வளவாளராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இச் செயலமர்வில் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியின் உயர்தர பிரிவின் அனைத்து துறை மாணவர்களுக்கும் கலந்து கொண்டனர்.
இதன்போது போதைப் பொருள் பாவனை, எதிர்கால பாதிப்புக்கள், உலகளாவிய ரீதியில் அடிமையானவர்களின் சான்றாதாரங்கள், மாணவர்களின் சிந்தனை நடத்தைகள், போதைப்பொருள் பாவனை தொடர்பாக மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள், சட்ட ரீதியான விடயங்கள் முதலிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி அதிபர் எஸ். பாலச்சந்திரன், பாடசாலை ஆசிரியர்கள், மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)