போதையில் இருந்த பிரித்தானிய இளம்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்திய மாணவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர் ப்ரீத் விகல் (Preet Vikal), இளம்பெண் ஒருவரை அவரது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளில் ப்ரீத் விகல் போதையில் இருந்த இளம்பெண் ஒருவரை தனது தோள்களில் தாங்கி கொண்டு கார்டிஃப் நகர மையம் வழியாக செல்வது பதிவாகியுள்ளது.
மேலும் விசாரணையில் பாதிக்கப்பட்ட இளம் பெண் நண்பர்களுடன் இரவு கொண்டாட்டத்தில் இருந்த போது அவரை ப்ரீத் விகல் சந்தித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அத்துடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் வீடு திரும்பிய போது நண்பர்களிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார்.
இதன்பிறகு போதையில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை ப்ரீத் விகல் கிங் எட்வர்ட் VII அவென்யூ மற்றும் நார்த் ரோடு வழியாக அவரது சொத்துக்கு அழைத்து சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் அவரது சொத்தில் வைத்து 20 வயதுடைய ப்ரீத் விகல் போதையில் இருந்த இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து எனக்கு இரவில் தூக்கம் வருவது இல்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய ப்ரீத் விகலுக்கு இளம் குற்றவாளிகள் அமைப்பில் 6 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கார்டிஃப் நகரில் இதுபோன்று நடப்பது முற்றிலும் அசாதாரணமானது, ஆனால் ப்ரீத் விகல் மிகவும் ஆபத்தான தனிநபர், போதையில் இருந்த பெண்ணை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.