போதையில் விபரீதம்; தந்தையுடன் முரண்பட்டு கண்ணை தோண்டிய மகன்!

You are currently viewing போதையில் விபரீதம்; தந்தையுடன் முரண்பட்டு கண்ணை தோண்டிய மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காவல்த்துறையினர் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே இச்சம்பவம் சனிக்கிழமை (18) மாலை இடம்பெற்றுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக 67 வயதுடைய தனது தந்தையை கடுமையான முறையில் தாக்கி 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

இந்த அகோர செயலுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று காவல்த்துறையினர் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த வாழைச்சேனை காவல்த்துறையினர், அவரது மகனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply