போரினால் நெருக்கடியில் தள்ளாடும் உக்கிரேன்!

You are currently viewing போரினால் நெருக்கடியில் தள்ளாடும் உக்கிரேன்!

உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் 55 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகரை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக ரஷிய ராணுவம் இன்று அறிவித்து உள்ளது. இதன் மூலம், ‘மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக’ ரஷிய அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். போர் தொடங்கியதிலிருந்து, கிழக்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரை குறிவைத்து நடத்தப்பட்ட ரஷியாவின் கடும் தாக்குதலால் அந்நகரம் உருக்குலைந்து போனது. இந்த நிலையில், மரியுபோல் நகரம், உக்ரைனை விட்டு ‘வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக’ ரஷியா நேற்று அறிவித்துள்ளள நிலையில்

உக்ரைனில் தற்போதைய பொருளாதரா நெருக்கடியை எதிர்கொள்ள மாதம் 7 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள உக்ரைன் கடுமையாக போராடி வருவதாக கூறியுள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply