ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு பேசியபோது ஹமாஸின் பல நிபந்தனைகளை ஏற்கவில்லை என்று கூறினார்.
அவர்களின் நிபந்தனைகள் சட்ட விரோதமானவை என்றும் குறிப்பிட்டார். அத்துடன் போர் முடிந்தாலும் பதவியில் நீடிப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், டெல் அவிவில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெதன்யாகு, ”இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பயங்கரவாதிகளை கொன்று குவித்தனர். நாள்தோறும் ஏராளமான பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுகின்றனர். ஹமாஸை நாங்கள் முற்றிலும் ஒழித்துவிட்டு எங்கள் பிணைக்கைதிகளை மீட்போம். போரில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்துள்ளார்.
காஸாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இஸ்ரேல் போர்களை நிறுத்த சர்வதேச அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் சுமார் 22,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.