போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடின் நிபந்தனை! நம்ப முடியாது- உக்ரைன் அதிபர் !

You are currently viewing போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடின் நிபந்தனை! நம்ப முடியாது- உக்ரைன் அதிபர் !

உக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

முதலில், உக்ரேன் தனது படைகளை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரீஷியா ஆகியவற்றிலிருந்து திரும்பப் பெற வேண்டும்.

இரண்டாவதாக, உக்ரேன் நேட்டோவில் சேரக் கூடாது.

90 நாடுகளின் பிரதிநிதிகள் சனிக்கிழமை சுவிட்சர்லாந்தில் சந்திக்கவிருக்கும் நேரத்தில், உக்ரேனுடன் போர் நிறுத்தம் செய்வதற்கான புதினின் நிபந்தனைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

உக்ரேன் அமைதிக்கான பாதை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.இதற்கு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதில் பங்கேற்க உள்ளார்.

இதேவேளை

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. இப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின. இதற்கிடையே உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை நடத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும். நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட ரஷியா தயாராக இருக்கிறது என்று புதின் தெரிவித்தார்.

இந்த நிலையில் புதினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, புதின் தெரிவித்துள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது ராணுவ தாக்குதலை நிறுத்த மாட்டார். அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை ஆகும். இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது. ஹிட்லர் செய்த அதே விஷயத்தை புதின் செய்கிறார். இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது என்றார்.

இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறும் போது, உக்ரைன் மீதான ரஷியாவின் அநியாயமான படையெடுப்பால் அவர்களது நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் கொல்லப்பட்டனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பினால் உக்ரேனிய இறையாண்மையை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம். அமைதியைக் கொண்டுவர உக்ரைன் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட அவர் எந்த நிலையிலும் இல்லை என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply