போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபா் முடிவு !

You are currently viewing போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபா் முடிவு !

ரஷ்யாவுடனான போரினை   முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்த திட்டத்தை வெளியிடவுள்ளதாக    உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரஷ்யாவுடன் நடந்துவரும் போரை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் ராணுவ வீரா்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, போா் நிறுத்தத்தை இனியும் தள்ளிப்போட முடியாது.

ராட்சிய  ரீதியில் போா் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. விரைவில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உக்ரைனின் போா் நிறுத்த ஒப்பந்த திட்டம் வெளியாகும் என்றாா் அவா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆண்டு படையெடுத்தது. தற்போது உக்ரைனின் சுமாா் ஐந்தில் ஒரு பகுதி ரஷிய கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தாலும், ரஷியாவால் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 4 பிராந்தியங்களின் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.

2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் இந்தப் போரில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்திட்டத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த மாதம் முன்வைத்தாா். அதில் தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களிலிருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேறுவது, நேட்டோவில் இணையும் முயற்சியை உக்ரைன் கைவிடுவது ஆகிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் போரை நிறுத்த ஒப்புக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments