போர்க் கப்பலை விரட்டி அடித்த சீனா ; ஆத்திரமடைய வைத்த அமெரிக்கா!

  • Post author:
You are currently viewing போர்க் கப்பலை விரட்டி அடித்த சீனா ; ஆத்திரமடைய வைத்த அமெரிக்கா!

சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் உள்ள பேரசல் தீவுகளுக்கு (Paracel Islands) அருகே, அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்., பேர்ரி ரக (USS Barry) போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது.

இந்த பகுதியை சொந்தம் கொண்டாடும் சீனா, தன் கடற்படை கப்பல்கள் மற்றும் போர் விமானம் மூலம், அமெரிக்க கப்பலை விரட்டியடித்துள்ளது. இது குறித்து, சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தென் சீன கடல் பகுதிக்குள், அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்தது, எங்களை ஆத்திரமடைய செய்துள்ளது என்றார்.

சீன இறையாண்மையை மீறும் வகையில், இந்த செயல் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளை கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, கொரோனா வைரசில் இருந்து, தங்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கப்பற்படை வெளியிட்டு உள்ள அறிக்கையில்

“சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடலின் உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் சட்டபூர்வமான பயன்பாடுகள்” ஆகியவற்றை வலியுறுத்த அமெரிக்கா முயன்றது.

தென் சீனக் கடலில் சட்டவிரோதமான மற்றும் கடும் கடல்சார் கூற்றுக்கள் கடல்களின் சுதந்திரத்திற்கு முன்னோடியில்லாத வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன, இதில் வழிசெலுத்தல் மற்றும் அதிகப்படியான பயணத்தின் சுதந்திரம் மற்றும் அனைத்து கப்பல்களு கடந்து செல்லும் உரிமை ஆகியவை அடங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள