போர்த்துகலில் வெப்ப அலைக்கு 10 நாளில் 1000 பேர் பலி!

You are currently viewing போர்த்துகலில் வெப்ப அலைக்கு 10 நாளில் 1000 பேர் பலி!

தற்போதைய வெப்ப அலை காரணமாக போர்த்துகலில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க நாடு தயாராக வேண்டும் என சுகாதாரத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெப்ப அலையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் போர்த்துகலும் ஒன்று என குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை தலைவர் Graça Freitas, அதிக வெப்பநிலை காலங்களுக்கு நாம் மேலும் தயாராக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட போர்த்துகல் முழுவதும் கடந்த வாரம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 ஃபாரன்ஹீட்) தாண்டியது. மேலும், வெப்ப அலை காரணமாக ஜூலை 7 முதல் 13 வரையான நாட்களில் அதிகப்படியாக 238 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஜூலை 18 வரையில் இறப்பு எண்ணிக்கை 1,063 என அதிகரித்துள்ளதாகவும் Graça Freitas தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிக வெப்பநிலை, தற்போதைய வறட்சி மற்றும் மோசமான வன மேலாண்மை தான் போர்த்துகல் முழுவதும் பரவும் காட்டுத்தீக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஸ்பெயின் உட்பட மற்ற தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். மேலும், வெப்ப அலை காரணமாக பெரும்பாலும் முதியவர்களே இறக்கின்றனர் என Graça Freitas தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments