போர்நிறுத்த பேச்சுவார்த்தை இனி தேவையில்லை: ஹமாஸ் படைகள் முன்வைக்கும் கோரிக்கை!

You are currently viewing போர்நிறுத்த பேச்சுவார்த்தை இனி தேவையில்லை: ஹமாஸ் படைகள் முன்வைக்கும் கோரிக்கை!

காஸாவிற்கு புதிய போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தேவையில்லை என தெரிவித்துள்ள ஹமாஸ் படைகள், இஸ்ரேலுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. காஸா தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டத்தை ஏற்க இஸ்ரேலுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் திட்டத்தை ஹமாஸ் படைகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

இதனிடையே, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான முட்டுக்கட்டையை முறியடிக்கும் நோக்கில் அமெரிக்கா ஒரு புதிய போர் நிறுத்த திட்டத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையிலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹமாஸ் படைகள், தெற்கு காசாவில் உள்ள பிலடெல்பி பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேறாது என்று வலியுறுத்துவதன் மூலம் ஒரு ஒப்பந்தத்தை முறியடிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முயன்றுள்ளார்.

நெதன்யாகுவின் தந்திரங்களில் விழுவதை எதிர்த்து நாங்கள் எச்சரிக்கிறோம், ஏனெனில் அவர் எங்கள் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நீடிக்க பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என ஹமாஸ் படைகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஜூலை 2ம் திகதி அமெரிக்கா முன்வைத்துள்ள ஒப்பந்தத்தை தாங்கள் ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் படைகள் சுட்டிக்காட்டியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments