ஆபிரிக்காவின் சாஹல் (Sahel) பிராந்தியத்தில் கிளர்ச்சித் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பிரெஞ்சுப் படை வீர்கள் நால்வர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு களத்தில் வைத்தே சிகிச்சை வழங்கப்படுகிறது. ஏனைய மூவரும் நாட்டுக்குக் கொண்டுவரப் பட்டுள்ளனர் என்று பிரெஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான பிரெஞ்சு படையினர் சாட்(Chad) நாட்டை தலைமையிடமாகக் கொண்டு அப்பிராந்தியத்தில் ஐந்து நாடுகளில் ‘Operation Barkhane’ என்னும் பெயரில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டுக்கு வெளியே பிரான்ஸ் படையினர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகுவது இது முதல் தடவை ஆகும்.
(நன்றி:குமாரதாஸன்)