ராணியார் இரண்டாம் எலிசபெத் மறைந்த அன்று இளவரசர் ஹரிக்கு மட்டும் வேறு மாளிகையில் தனியாக உணவு பரிமாறப்பட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமான அன்று இரவு, மன்னர் சார்லஸ் அவரது மனைவி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் ஒன்றாக ஒரே மாளிகையில் உணவருந்தியுள்ளனர்.
ஆனால் இளவரசர் ஹரிக்கு மட்டும் வேறு மாளிகையில் குடும்பத்தினருடன் தனியாக உணவு பரிமாறப்பட்டுள்ளது. ராணியாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில், பால்மோரல் மாளிகைக்கு கடைசியாக வந்து சேர்ந்தவர் இளவரசர் ஹரி.
மட்டுமின்றி, இளவரசர் வில்லியம், இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர் ஸ்கொட்லாந்துக்கு புறப்பட இருந்த விமானத்தில் இளவரசர் ஹரிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதற்கான காரணங்கள் அரண்மனை வட்டாரத்தில் இருந்து கூறப்பட்டாலும், இளவரசர் ஹரி தமது பாட்டியாரின் இறுதி நிமிடங்களில் அவருடன் இல்லாமல் போவதற்கு காரணமாக அச்சம்பவத்தை குறிப்பிடுகின்றனர்.
இதனால், மன்னர் சார்லஸ், இளவரசி ஆன் மட்டுமே ராணியார் இறப்பதற்கு முன்னர் பால்மோரல் மாளிகைக்கு வந்து சேர்ந்துள்ளனர். மேலும், பால்மோரல் மாளிகைக்கு ஹரி வந்து சேர்ந்த போது மன்னர் சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியம் அருகாமையில் உள்ள Birkhall மாளிகைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கேயும் ஹரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, இளவரசி ஆன் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வார்ட் ஆகியோருடன் ஹரி தங்கியுள்ளார். மட்டுமின்றி, அன்றிரவு உணவு தனித்தனியாக பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது மன்னர் சார்லஸ் மற்றும் அவரது வாரிசு இளவரசர் வில்லியம் ஆகியோருக்கு ஒரு பக்கமும், இளவரசர் ஹரி உட்பட எஞ்சிய அனைவருக்கும் ஒரு பக்கமும் உணவு பரிமாறப்பட்டுள்ளது.
ஆனால் சனிக்கிழமை விண்ட்சர் கோட்டைக்கு வெளியே பொதுமக்களின் மலர் அஞ்சலியைக் காண ஹரி மற்றும் மேகனை இளவரசர் வில்லியம் நேரிடையாக சென்று அழைத்ததாக கூறப்படுகிறது.
சகோதரர்கள் இடையே இன்னமும் மனக்கசப்பு இருந்தாலும் ராணியாருக்காக இருவரும் ஒன்றாக காட்சியளிப்பதாகவே கூறுகின்றனர்.