கொரோனா வைரஸ் பரவல் திடீரென மீண்டும் அதிகரித்தால் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.
குறிப்பிட்ட யோசனைகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுகாதார அமைச்சு வெளியிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.முடக்கல் நிலை தளர்த்தப்பட்ட பின்னர் மக்களின் நடவடிக்கைகளை பார்க்கும் போது இலங்கையில் மீண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பது வெளிப்படையாக தெரிகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை மக்கள் தீவிரமாக கருதாவிட்டால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித்த அலுத்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க முடியாவிட்டால் அதிகரிக்கும் நோய் தொற்றினை சுகாதார துறையினரால் கையாள முடியாத நிலையேற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.