மக்களின் போராட்டத்தினால் பின்வாங்கிய கென்ய ஜனாதிபதி !

You are currently viewing மக்களின் போராட்டத்தினால் பின்வாங்கிய கென்ய ஜனாதிபதி !

கென்யாவில் பாரிய போராட்டங்களை அடுத்து சர்ச்சைக்குரிய வரி உயர்வுகள் அடங்கிய நிதி யோசனையை திரும்பப் பெறுவதாக கென்யாவின் ஜனாதிபதி வில்லியம் ருடோ (William Ruto) அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

கென்ய மக்கள் இந்த வரியுயர்வை விரும்பாமையால், தாம் அதில் கையெழுத்திடப்போவதில்லை என்று அவர் உறுதியளித்துள்ளார்.

மனித உரிமைகள் அமைப்பின் தகவல்களின்படி, கென்யாவில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த போராட்டங்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் போராட்டங்களில் முன்னணியில் இருந்த இளைஞர்களுடன் உரையாடலில் ஈடுபடப் போவதாக கென்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த யோசனைக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடந்த போதிலும், கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் அந்த யோசனை நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, உட்புறத்தை நாசப்படுத்தினர்.

மக்களின் போராட்டத்தினால் பின்வாங்கிய கென்ய ஜனாதிபதி ! 1

அத்துடன் வளாகத்தின் சில பகுதிகளுக்கு தீ வைத்தனர். சட்டமன்றத்தின் அதிகாரத்தைக் குறிக்கும் சடங்குச் சின்னம் திருடப்பட்டது.

இந்தநிலையில் வன்முறை மற்றும் அராஜகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிய கென்ய ஜனாதிபதி இராணுவத்தை பாதுகாப்புக்கு அழைத்தார்.

எனினும் பொதுமக்களின் பாரிய போராட்டங்கள் தொடர்ந்ததை அடுத்து, அவர் தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார்.

மக்களின் போராட்டம் : முடிவிலிருந்து பின்வாங்கிய கென்ய ஜனாதிபதி | Kenyan President Backtracks On Decision

அத்துடன் வளாகத்தின் சில பகுதிகளுக்கு தீ வைத்தனர். சட்டமன்றத்தின் அதிகாரத்தைக் குறிக்கும் சடங்குச் சின்னம் திருடப்பட்டது.

இந்தநிலையில் வன்முறை மற்றும் அராஜகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிய கென்ய ஜனாதிபதி இராணுவத்தை பாதுகாப்புக்கு அழைத்தார்.

எனினும் பொதுமக்களின் பாரிய போராட்டங்கள் தொடர்ந்ததை அடுத்து, அவர் தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply