மயிலத்தமடு மாதவணை வம்மிகுளம் ஆற்று ஒரமாக சுமார் 30 ஏக்கருக்கு மேற்பட்ட புல்தரைக்கு முழுமையாக களைநாசினி அடித்துள்ளனர், இதனை உண்ணும் கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு எற்பட்டுள்ளதாகவும் அத்துடன் காணிகள் உழவு செய்து புல் அழிக்கப்படுகின்றது எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன, மீண்டும் புல் உற்பத்தியாக சுமார் மூன்றுமாதங்கள் செல்லும் நிலையை சிங்கள பெரும்பான்மையினர் திட்டமிட்டு தமிழ் மக்களின் பொருளாதார உற்பத்தியை நசுக்கியுள்ளார்கள்.
தற்போது பால் உற்பத்தியில் கனிசமான முன்னேற்றம் ஏற்பட்டு பண்ணையாளர்களின் ஒரளவுக்கு திருப்தியில் இருக்கும் நிலையில் இந்த கயமைத்தனதம் காடையர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழருக்கு இதுதான் நிலை என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார்கள்.