மட்களப்பு மாவட்டத்தின் கரடினாறு கிராமத்தின் மிகவும் பின் தங்கிய கிராமமான தும்வாழங்சோலை கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தண்ணீர் பற்றாக்குறையினை தீர்க்கும் முகமாக குழாய்நீர் வசதி மற்றும் குடிநீர் தாங்கி கட்டு நிர்மாணம் ஆகிய செயற்பாடுகளை நிறைவேற்றி மக்களிடத்தில் கையளித்திருந்தனர்.

இவ் செயற்பாட்டிற்கான நிதியுதவியை ஜேர்மனி நாட்டின் அம்மா உணவகம் அமரர் மதிவதனசேகரன் கெங்காதேவி அவர்களின் நினைவாக பாலச்சந்திரன் அறக்கட்டளை நிறுனத்தினூடாக வழங்கியிருந்தனர்.

இவ்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் , மற்றும் மாவட்ட அமைப்பாளர் திரு.சுரேஸ் மற்றும் உறுப்பினர்கள் கிராம தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
