மக்களிற்கு வாங்கப்பட்ட முகக்கவசங்களை கையகப்படுத்திய பலத்த விமர்சனம்!!

You are currently viewing மக்களிற்கு வாங்கப்பட்ட முகக்கவசங்களை கையகப்படுத்திய பலத்த விமர்சனம்!!

பல நகரங்கள், தங்களிற்காக மக்களின் தேவைக்காக ஆணை வழங்கப்பட்டு, பாசல்-முலூஸ் (aéroport de BâleMulhouse) விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மில்லியன் கணக்கான முகக்கவசங்கள், நகரங்களிற்கு வழங்கப்படாமல், அரசாங்கம் அவற்றைக் கையகப்படுத்தி (réquisition)உள்ளது. இதனை உள்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார்.

பல நகரங்கள் இந்தக் கொள்வனவு ஆணையின் அடிப்படையில், தங்களின் குடிமக்களைக் கட்டாய முகக்கவசம் அணியவேண்டிய மாநகர ஆணையை நிறைவேற்றியிருந்தனர். ஆனால் இதனை உடனடியாக நிறுத்தும்படி உள்துறை அமைச்சர் ஆணையிட்டு, நிதிமன்றங்கள் மூலம் தடையும் வழங்கப்பட்டது.

இந்த முகக்கவசங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இவை மருத்துவப் பணியாளர்களிற்கும், முக்கிய தேவையுள்ள பணியாளர்களிற்கும் வழங்கப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சீனாவிடம் கொள்வனவு செய்த முக்க்கவசங்கள் வந்து சேராதநிலையில் இவை கையகப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய முகக்கவச கையிருப்பை தேவையான நேரத்தில் பூர்த்தி செய்யாமல் விட்டு விட்டு, தற்போது மக்களிற்காக வாங்கப்பட்ட முகக்கவசங்களையும் கையகப்படுத்தி இருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

பகிர்ந்துகொள்ள