கனடா தமிழீழச் சங்கம் என முன்பு அழைக்கப்பட்ட TESOC Multicultural Settlement and Community Services இல் பல தசாப்தமாக உளவியல் ஆற்றுப்படுத்தல், குடும்பச் சிக்கல்களைத் தீர்க்க உதவுதல், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை காத்து வழிகாட்டல், மது போதை போன்றவற்றிற்கு அடிமையானவர்களை மீட்டல் உள்ளிட்ட பன்முகச் சேவைகளை ஆரம்ப காலங்களில் பணியிலிருந்தும் பின் வெளியிருந்து அருட் தந்தையாகவும் அயராமல் தொண்டாற்றி மக்கள் பணியைத் தன் உயிர் மூச்சில் இறுதிவரை சுமந்து வந்த அருட்தந்தை சேவியர் அவர்கள் தனது 97 ஆவது அகவையில் காலமானார்.
இவர் கனேடிய புதிய குடிவரவாளர்களின் மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்டு அல்லும் பகலும் உழைத்த அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டாளர் மட்டுமல்ல அன்பாளரும் ஆவார்.
பழகுதற்கு இனியவராக, கலகலப்பாகப் பேசி இதமான பேச்சால் துன்பப்பட்டவரை அன்பால் உளமாற வருடி மகிழ்விப்பவராக கனடா வாழ் மக்களால் நன்கு அறியப்பட்ட இவர் தாய் மண்ணிற்காகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவிலிருந்து குரல் தந்துள்ளார்.
அன்னாரின் இழப்புக் கனடியத் தமிழ்ச் சமூகத்திற்குப் பேரிழப்பு!
அவரின் இழப்பில் துயருரும் குடும்பத்தினர் கனடிய தமிழ்ச் சமூகத்தினரோடு நாமும் இணைந்துகொள்கின்றோம்!
இறுதி வணக்க நிகழ்வு