மங்கிப்போன குத்துவிளக்கு கூட்டணி சங்கை தமது சின்னமாக கொண்டு களத்தில்!

You are currently viewing மங்கிப்போன குத்துவிளக்கு கூட்டணி சங்கை தமது சின்னமாக கொண்டு களத்தில்!

ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து வருகிறோம் என ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சிறீலங்கா சனாதிபதி தேர்தலுக்காக களமிறக்கப்பட்ட சங்கு ஒற்றுமை எனும் வெற்றுக்கோசத்தோடு ஊதப்பட்டது ஆனாலும் இந்த சங்குக்கூட்டணி தனிப்பட்ட கட்சிகளுக்கு சங்கு சின்னத்தை எதிர்காலத்தில் பாவிக்க கூடாததேன வரையறை விதிக்கப்கட்டதாக தெரியவருகின்றது.

 கடந்தகாலங்களில் மங்கிப்போன குத்துவிளக்கு கூட்டணி சங்கை தமது சின்னமாக கொண்டு பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்போது சங்குக்கு பின்னால் கூவித்திரிந்த பொது அமைப்புகள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி இந்திய அடிவருடி அரசியல் செய்யபோகின்றார்களா? அல்லது தமிழ் மக்களின் உரிமை அரசியலுக்கு ஆதாரவாக நிக்கப்போகின்றார்களா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

ஆய்வாளர் நிலாந்தன், சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் புலத்திலுள்ள இந்திய நிகழ்சி நிரலில் இயங்கும் கூட்டுக்களவாணிகளின் ஒற்றுமை எனும் வெற்றுக்கோசத்தினை நம்பி உரிமை அரசியலை நலிவடைய செய்யும் இந்த தீயசக்திகளை எனியாவது விரட்டியடிக்க விழிப்பாக இருப்போம்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply