மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

You are currently viewing மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு சிறீலங்கா காவற்துறை குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply