மட்டக்களப்பு வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்நாள் (04) இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சம்பவத்தில் ஓமனியாமடு கிராமத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார். சடலமானது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.