மட்டக்களப்பு நகரில் இன்று இனங்காணப்பட்ட கொரனா தொற்றாளரின் மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இன்று காலை மட்டக்களப்பு லொயிட்ஸ் வீதியில் உள்ள ஒருவருக்கு கொரனா தொற்று இனங்காணப்பட்டது.
இவர் செங்கலடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் நிலையில் எதேச்சையாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் மூலம் இவருக்கு கொரனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த அடிப்படையில் இன்று காலை அவரை சுகாதார பிரிவினர் இன்று சிகிச்சைக்காக அழைத்துச்சென்ற அதேவேளை குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பீசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த நபரின் மனைவி மற்றும் 16வயதுடைய மகள்,13வயதுடைய மகன் ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் இன்னொரு மகனான 20வயதுடைய மகனுக்கு தொற்று ஏற்படவில்லையெனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த குடும்பத்துடன் தொடர்புகளை பேணியவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் சுகாதார பிரிவினரிரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுள்ளனர்.
ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.