மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபன் ஊர்தியை தாக்க முனைந்த பிள்ளையான் குழு . வெளியான அதிர்ச்சி தகவல்

You are currently viewing மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபன் ஊர்தியை தாக்க முனைந்த பிள்ளையான் குழு . வெளியான அதிர்ச்சி தகவல்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று காலை 10.48 மணிக்கு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்  யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் திலீபனின் உருவப்படத்தைத் தாங்கிய ஊர்தி மீதான தாக்குதல் முயற்சியொன்று மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.

அதேபோன்ற முயற்சியொன்று மட்டக்களப்பு நாவலடிச் சந்தியில் வைத்தும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

சிங்கள பேரினவாத அரசின் புலனாய்வாளர்களுடன் இணைந்து, சிங்கள புலனாய்வுப் பிரிவின் ஊதியத்தில் செயற்பட்டுவருகின்ற   ஓட்டுக்குழு பிள்ளையானின் உறுப்பினர்கள் சிலரும் முறக்கொட்டாஞ்சேனையில் குண்டர்களுடன் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply