மட்டக்களப்பு நகர பார் வீதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்ததுடன், அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளையும் தோட்டுடன் காதை வெட்டி எடுத்து பையிலி்ட்டு கொண்டு செல்ல முட்பட்ட குறித்த வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணையும் அவரது தந்தையையும், அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பார் வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் உயிரிழந்தவர் அவருடைய கணவர் மகள் ஆகிய மூவரும் வாழ்ந்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இன்று பகல், குறித்த வீட்டில் முன்பு, வீட்டுவேலை பார்த்து வந்த பெண் ஒருவர், அவரது தந்தையுடன் சென்று தனது கஸ்டத்தை தெரிவித்துள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு நித்திரை கொள்வதற்கு மேல்மாடிக்கு சென்றுள்ளார்.
அதேவேளை மகளும் உணவை உண்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளனர் அதேநேரம் உயிரிழந்தவர் குறித்த பணிப்பெண்ணையும் மற்றும் அவரின் தந்தையையும் உணவு உண்டுவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணை கத்தியால் கழுத்து மற்றும் கைகளை துண்டாகவெட்டியதையடுத்து அவர் உயிரிழந்த நிலையில், அவரின் கழுத்தில் இருந்த தங்க ஆபரணங்களையும் காதில் இருந்த தோட்டை காதுடன் அறுத்தெடுத்து பையில் போட்டு எடுத்துக் கொண்டு முச்சக்கரவண்டியில் ஒன்றில் தப்பியோட முயற்சித்தபோது அங்கு வீதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்ததாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட பெண் திருமணம் முடித்துள்ளதாகவும் இவர்கள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸ் தடயவியல் பிரிவு வரவழைக்கப்பட்டு இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.