மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி பெரிய உப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று செவ்வாய்கிழமை காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மட்டு ரயில்நிலையத்தின் முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை செலுத்திவருவதாகவும், கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 04.00 மணிக்கு வந்தடையும் ரயிலில் வரும் பிரயாணிகளை ஏற்றி செல்வதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை வீட்டைவிட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

இந்நிலையில் ரயில் நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து புன்னைச்சோலை பகுதிக்கு பிரயாணி ஒருவரை ஏற்றிச் சென்றவர், பார்வீதி உப்போடையில் வீதியில் காலை 06.00 மணிக்கு முச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் அதன் அருகே மர்மாக உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.