மட்டக்களப்பில் 49 மாதிரிகளில் 43பேருக்கு டெல்டா தொற்றுறுதி!

You are currently viewing மட்டக்களப்பில் 49 மாதிரிகளில் 43பேருக்கு டெல்டா தொற்றுறுதி!

ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43பேருக்கு டெல்டா வேறியன்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நான் அல்பா வேரியன்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 88வீதமானவர்களுக்கு டெல்டா வேரியன்கள் இருக்ககூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 193கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நான்கு மரணங்களும் ஏற்றபட்டுள்ளதாகவும் அவற்றில் 10வயது சிறுவன் ஒருவன் வவுணதீவில் கொரனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக வயது குறைந்த மரணம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்களை சமூக பொறுப்புடன் செயற்படுமாறும் அனைவரையும் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்த பணிப்பாளர் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply