மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 116 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 72 நபர்களுக்கும்,மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 15 நபர்களும் ,களுவாஞ்சிகுடி ,காத்தான்குடி,ஆரையம்பதி தலா ஒரு நபருக்கும் கோரளைப்பற்று 10 நபர்களுக்கும், செங்கலடி 08 ,ஏறாவூர் 04 ,பட்டிப்பளை 02 ,2 பொலிஸார் உட்பட 116 பேருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.