மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது, நேற்றைய தினம்(20) மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை பட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதியில் துவிச்சக்கரவண்டி ஒன்றும் காலணியும் கிடப்பதாக அப்பகுதியில் பயணித்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை ஆற்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யோகநாதன் கிதுசன் அடையாளம் காணப்பட்டுள்ளாதாக சடலத்தைப் பார்வியிட்ட திடீர் மரண விசாணை அதிகாரி வி.ஆர்.மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய ஸ்த்தலத்திற்கு விரைந்த திடீர்மரணவிசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதுடன் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி சிறீலங்கா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.