மட்டக்களப்பு மாவட்டத்தில் 139 கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் 118 வேட்புமனுக்களே தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.எம்.சபீயான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
”மட்டக்களப்பு மாவட்டத்தில் – 118 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், 17 வேட்புமனு நிராகரிப்பும் , 101 வேட்புமனு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.