மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை மேற்கு கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை. 97 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .
68 பேர் கலைத்துறையிலும், 13 பேர் வர்த்தகத்துறையிலும், 07 பேர் பௌதீக விஞ்ஞானத்துறையிலும், 03 பேர் உயிரியல் விஞ்ஞானத்துறையிலும், 05 பேர் பொறியியல் தொழில்நுட்ப துறையிலும், ஒருவர் (01) உயிரியல் தொழில் நுட்பத்துறையிலும் மொத்தமாக 97 மாணவர்கள் முதல் தடவையாக தெரிவு செய்ய பட்டுள்ளனர்.இவர்களில் 11 பேர் ‘3A’ க்களும், 16 பேர் 2A, B க்களும், 9 பேர் 2A, C க்களும் பெற்றுள்ளனர்.
மேலும் நகர் புற மாணவர்களில் குறைந்தது 6 பேர் merit pass இல் medicine சென்றால் எமது கிராமப்புற மாணவிய ஒருவரும் (Bw/கன்னன்குடா மகா வித்தியாலய மாணவி 36th rank,) வைத்திய துறைக்கு போக கூடிய அதிகமான வாய்ப்புக்கள் உண்டு.கிராமமும் ஒரு வைத்தியரைக் காணும்.
மேலும் 4 மாணவிகள்(அரசடித்தீவு மாணவிகள் -2, அம்பிளாந்துறை மாணவிகள் -2) சட்டதுறைக்கும், 1 மாணவன் (முதலைக்குடா மாணவன் ETech இல் all island rank 154th)merit இல் செல்வதும் குறிப்பிடத்தக்கது.
வலயக்கல்விப்பணிப்பாளர் சி. சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில், இதற்காக முன்னின்று எம்முடன் இணைந்து கஷ்ரப்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ISAa, ADEe, மற்றும் அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் சமூக சங்கங்கள், மன்றங்கள், ஆலயங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.