ஓராண்டுக்கு முன்னர் எமது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரது கால் கழற்ப்படவேண்டிய ஆபத்திலிருந்து அவரைக் காப்பாற்றியதுடன், அவரது உயிரையும் காத்தமைக்காக மட்டு வைத்தியசாலை வைத்தியசாலை நிர்வாகத்தினர் வைத்திய நிபுணர் சேகர் மற்றும் 10 விடுதியில் கடமையாற்றிய அவரது வைத்திய குழாத்தினர் மற்றும் தாதியர்கள் சுகாதார உதவியாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
தமிழ் மக்களது விடுதலை வரலாற்றை இளம்தலைமுறையினர் மத்தியில் கடத்திச் செல்லும் பணியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே உயிர்ப்புடன் முன்னெடுத்துவருகின்றது.
அதனால் அதன் செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக சிறீலங்கா அரசு பல்வேறு கெடுபிடிகளை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மீது அரங்கேற்றியவண்ணம் உள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் 2023 November 27 நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.க.குககுமாரராஜா அவரது மனைவி ஜெயந்தி அக்கா மற்றும் மகன் ஜனோஜன் ஆகிய மூவரும் கைது செய்ப்பட்டனர்.
எமது மாவட்ட அமைப்பாளர் மீதும் அவரது மகன் தொழினுட்பக் கல்லூரி மாணவன் ஜனோஜன் ஆகிய இருவர் மீதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பொய்வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திரு.க.குககுமாரராஜா சுகாதாரமற்ற, தொற்றுக்கள் நிறைந்த பகுதியில் அடைக்கப்பட்டமையினால் திட்டமிட்டே நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டு அவரை கொலை செய்வதற்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவு முயன்றது.
தொற்றுக்குள்ளாகிய அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.
நோய்வாய்ப்பட்ட அவரை பெரும்பிரயத்தனத்திற்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கச் செய்யப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து சுமார் இரண்டரை மாதங்கள் மிகமோசமான கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெறவேண்டியிருந்தது.
அவரது கால் அகற்றப்பட வேண்டி நிலையைநோக்கிச் சென்றது. அவரது உயிர் பிரிந்திருக்கும்.
எனினும் மட்டக்களப்பு வைத்தியசாலை வைத்தியர்கள் அப்பணிப்புடன் வழங்கிய மருத்துவ சேவையினால் அவரது காலும் தப்பித்தது.
அவரது உயிரும் தப்பித்தது.
அவரது கால் அகற்றப்படாமல் அவரைக் குணப்படுத்தியதுடன் அவரது உயிரைக் காத்த மட்டக்களப்பு வைத்தியசாலை வைத்தியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவருடைய நலன்களுக்காக அற்பணிப்புடன் உழைத்த CHRD சட்ட ஆலோசனை நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் ஐயாவுக்கும் சிரேஸ்ட சட்டத்தரணி ரனித்தா அக்காவுக்கும் சிரேஸ்ட சட்டத்தரணி விஜயகுமார் அண்ணாவுக்கும் சட்டத்தரணி லக்சி மற்றும் சட்டத்தரணி சுலோஜன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவரது விடுதலைக்காகவும் வைத்தியசாலையில் அவரது நலன்களை கவனிப்பதற்காகவும் அயராது உழைத்த எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் எமது தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகள்.
ஓராண்டுக்கு முன்னர் 27-11-2023 திரு.க.குககுமாரராஜா அவரது மகன் ஜனோஜன் ஆகிய இருவரும் மட்டக்களப்பு கொடுஞ்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் 08-02-2025 விடுவிக்கப்பட்டாலும் இன்று வரை பயங்கரவாத விசாரணைப்பிரிவின் விசாரணைக் கொடுபிடிகள் முடியவில்லை.