மட்டக்களப்பில் 222 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் நேற்று 305 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 222 பேருடன் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,421 ஆக உயர்ந்துள்ளது.
திருகோணமலையில் நேற்று 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் மாவட்டத்தில் இதுவரை 2,525 பேர் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாறையில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 25 பேருடன் மாவட்டத்தில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 3,076 ஆக அதிகரித்துள்ளது.