மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 68கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 68கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 22பேரும்,
செங்கலடி வைத்திய அதிகாரிகள் பிரிவில் 11பேரும்,
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 10பேர் உட்பட 68பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8275கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 116பேர் உயிரிழந்துள்ளதுடன் 755பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இறப்புகளில் 69வீதமான இறப்பானது 60வயதுக்கும் மேற்பட்டவர்களாகவுள்ளனர்.
மூன்றாவது அலை காரணமாக 7292பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 107மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 320221 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. இதுவரையில் 142754கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்டவர்கள் 311000பேர் உள்ளனர்.
இவர்களில் 46வீதமானவர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச வைத்தியசாலைகள், ஆதார வைத்தியசாலைகளில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றது.
அத்துடன் அப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள்,பொது இடங்களிலும் தடுப்பூசிஏற்றப்பட்டுவருகின்றது.
30வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் முதலாவது கொவிட் தடுப்பூசியைப்பெற்றுள்ளனர்.இரண்டாவது தடுப்பூசி ஒரு மாதத்திற்கு பின்னர் வழங்கப்படும்.
வெளிநாடு செல்லவுள்ளவர்கள் வேறு தடுப்பூசிகளைப் பெறவேண்டுமானால் அவர்கள் ஒன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அதனைப் பெற்றுக்கொள்ளமுடியும்.