மட்டக்களப்பு மாவட்டத்தில் 58 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 118 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்படையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் – 58 பேர்
அம்பாறை மாவட்டத்தில் – 37 பேர்
திருகோணமலை மாவட்டத்தில் – 23 பேர்
என நேற்றைய தினம் (ஜூலை-31) கிழக்கு மாகாணத்தில் 118 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.