டிப்பர் வாகனம் ஒன்றைப் சிறீலங்கா காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.
நேற்று புதன்கிழமை யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையினர் வல்லிபுரம் – ஆனைவிழுந்தன் வீதியில் வைத்து நிறுத்துமாறு கோரியபோது தப்பியோட முற்பட்டபோது சிறீலங்கா காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி கைப்பற்றினர்.
கடத்தக்காரர்கள் தப்பித்த நிலையில், டிப்பர் வாகனம் பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்