மண்டை தீவில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டு காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினரின் தேவைக்காக இன்று காலையில் 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான பின்வரும் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்
J /10 கிராமசேவையாளர் பிரிவு அல்லைப்பிட்டியில் 7 பரப்பு காணியும் , J/11 மண்கும்பானில் 4 பரப்பு காணியும் அதேபோல் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் கடற்படையினரின் தேவைகளுக்காக காணி சுவீகரிக்கப்பதற்காக நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று காலை 9.30 மணியளவில் அவ்விடத்திற்கு வருகை தந்த போது பொதுமக்கள் மற்றும் அரசியல்பிரதிநிதிகள் திணைக்கள வாகனத்தை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததால் காணி சுவீகரிப்பு செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணி சுவிகரிப்பு எதிர்ப்பு முயற்சியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தீவகபகுதி மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.