மத்தியகிழக்கிலிருக்கும் தனது படைக்கலங்களை ஸைப்ரஸ் நோக்கி நகர்த்தும் அமெரிக்கா! ஈரான் மீதான போருக்கு ஆயத்தமாகிறதா அமெரிக்கா!!

You are currently viewing மத்தியகிழக்கிலிருக்கும் தனது படைக்கலங்களை ஸைப்ரஸ் நோக்கி நகர்த்தும் அமெரிக்கா! ஈரான் மீதான போருக்கு ஆயத்தமாகிறதா அமெரிக்கா!!

மத்தியகிழக்கு நாடுகளிலுள்ள தனது போர்விமானங்கள் உள்ளிட்ட பிரதான படைக்கலங்களைஸைப்பிரஸ் நாட்டுக்கு அமெரிக்கா நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

போரொன்று ஏற்படும் நிலை வந்தால்மத்தியகிழக்கிலிருக்கும் அமெரிக்கப்படைகளைபாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளுக்கான முன்னேற்பாடாகவோ அல்லது ஈரான்மீதானபடையெடுப்பொன்றுக்கு ஆயத்த வேலையாகவோ அமெரிக்கா இம்முயற்சிகளில் ஈடுபடுகிறது என்றஇருவிதமான சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில்கிரேக்க ஊடகமொன்றுஇச்செய்தியை வெளியிட்டுள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அமெரிக்க படைக்கலங்களை தனது நாட்டில் நிலைநிறுத்திக்கொள்வதற்கான அனுமதியை ஸைப்ரஸ் அமெரிக்காவின்கு வழங்கியுள்ளதாக ஸைப்ரஸ்வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில்அமெரிக்காவின் இந்த ஸைப்ரஸ்நோக்கிய நகர்வுகள் ஆரம்பித்துள்ளன.

ஈராக்கிலுள்ள அமெரிக்கத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத்தாக்குதல்களை நடாத்துவதற்குமுன்னதாகஅமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு முன்னெச்சரிக்கையை ஈரான்விடுத்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில்தாக்குதலுக்குள்ளான தளங்களில்இருந்த அமெரிக்க – நோர்வே இராணுவவீர்ர்களின் உயிர்களுக்கு இழப்பேதும் இல்லாமலே தனதுபலத்தை அமெரிக்காவுக்கு தெரிவிக்க ஈரான் முனைந்திருப்பதாக கருத்துக்கள்முன்வைக்கப்படுகின்றன.

ஈரானின் இந்த நகர்வு.நா.சபை உள்ளிட்ட சர்வதேச நோக்கர்களின் பார்வையில்வரவேற்கத்தக்க இராசதந்திர நகர்வாகவே பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறதுஅமெரிக்க– நோர்வே வீரர்களின் உயிர்களுக்கு இழப்பேதும் ஏற்படாமல் வெறுமனே பொருட்சேதங்களைமட்டுமே ஏற்படுத்தியதன் மூலம்இறுக்கமான நிலைமையை தணிப்பதற்கான பெரும்பங்கை ஈரான்ஆற்றியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதேவேளைஈராக்கில் நிலைகொண்டிருக்கும் “NATO” கூட்டுப்படைகளில் அங்கம் வகித்த தனதுநாட்டு வீரர்களை ஜேர்மனி திருப்பியழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஎனினும்நோர்வேவீரர்களை உடனடியாக திருப்பியழைக்கும் எண்ணமேதும் இல்லையென நோர்வேதெரிவித்திருக்கிறது.

நிலைமை இவ்வாறிருக்கையில்மத்தியகிழக்கில் “NATO” அமைப்பினசார்பாக இராணுவபிரசன்னங்களை அதிகரிக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புவதாகவும்எனினும்தொலைதோக்கு அரசியல் நோக்கமேதுமில்லாமல் ஈரானிய இராணுவத்தளபதியின்படுகொலைக்கு உத்தரவிட்டதால்தணிந்து போயிருந்த மத்தியகிழக்கு மீண்டும் பற்றியெரியஅதிபர் ட்ரம்ப் காரணமாகிவிட்டார் என்பதில் சலிப்படைத்துள்ள “NATO” அங்கத்துவநாடுகளிடையே அமெரிக்காவிற்கெதிராக கருத்து வேற்றுமைகள் எழுந்துள்ளதாகவும்இதன்பின்னணியிலேயேஈரானிய இராணுவத்தளபதியின் படுகொலை அமெரிக்காவின் தனிப்பட்ட முடிவுஎன்றும் அதற்கும் “NATO” அமைப்பிற்கும் படுகொலைக்கும் எவ்விதமான தொடர்புகளும்இல்லையென “NATO” தலைவர் “Jens Stoltenberg” வெளிப்படையாகவே அறிவித்திருந்ததாகவும்சொல்லப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள