முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்தின் மீது சிறீலங்கா வான்படை கிபிர் குண்டு வீச்சு விமானங்கள் கோரத் தனமாகக் குண்டு வீசி பல அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்த தன்
24, வது ஆண்டு நினைவு நாள் இன்று (15.09.2023) வெள்ளிக்கிழமை நினைவு கூறப் பட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு இதே நாள் காலை வேளை திடீரென வன்னி வான் பரப்பில் நுழைந்த இரண்டு கிபிர் குண்டு வீச்சு விமானங்கள் மந்துவில் சந்தியை அண்டிய அப்பாவி பொது மக்களின் குடியிருப்பு மீது அடுத் தடுத்து குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடாத்தி பெரும் அவலத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றன.
இதன் போது குழந்தைகள், பெண்கள்,உட்பட பலர் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர , பலர் படுகாயம் அடைந்தனர்.அந்த நினைவு நாளே இன்று தாய்த் தமிழ்ப் பேரவையால் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்டுள்ளது .
அண்றைய நாளில் மறக்க முடியாத ஒரு பெரும் படுகொலைச் சம்பவமாக இது பதிவாகிறது.