மனிதத்தை தொலைத்து ஓரவஞ்சக உலகமாக மாறுகிறது!

You are currently viewing மனிதத்தை தொலைத்து ஓரவஞ்சக உலகமாக மாறுகிறது!

இஸ்ரேலுக்கு ஆதரவளித்து 7,000 பாலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையே நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பலர் அகதிகளாக மீள்குடியேற பல நாடுகளுக்கு விசாவுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதில் பல பாலஸ்தீனர்களும் அவுஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்த விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா நிராகரித்து வருகிறது.

அவுஸ்திரேலிய விசாவுக்காக பாலஸ்தீனியர்கள் செய்த விண்ணப்பங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.

ஆனால், அதே நேரத்தில் இஸ்ரேல் குடிமக்களுக்கான அவுஸ்திரேலிய விசா விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அவுஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டோனி பர்கோ தெரிவித்தார்.

ஊடக அறிக்கையின்படி, 10,033 பாலஸ்தீனியர்கள் அவுஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 2,922 விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 7,111 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இஸ்ரேலிய குடிமக்களின் 235 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 8,646 விசா விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

அண்மையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் ஹமாஸை ஆதரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்பினர்.

காசாவில் இருந்து வரும் விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. பாலஸ்தீனியர்களின் நுழைவு அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூட்டத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments