1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கராணகொட தொடர்புபட்ட 2008 – 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரே மாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்றவேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேகநபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் பத்தாம் திகதி தேசிய தொழில் பயிற்சி நிறுவகத்தின் உதவி முகாமையாளர் ஏஜி சமந்த பிரீத்தி குமார 15 கிராம் ஹெரோயினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர் தாங்கள் விசாரணை செய்தவேளை அவர் வன்முறையான விதத்தில் நடந்துகொண்டார் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கினார் உடைந்த போத்தலால் தாக்கினார் என தெரிவித்துள்ள இலங்கை பொலிஸார் பொலிஸாருடனான கைகலப்பின்போது அவர் உயிரிழந்தார் என தெரிவித்தனர் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் மரண விசாரைணயின் போது உட்காயங்கள் காரணமாக ஏற்பட்ட குருதிப்பெருக்கே மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது ஒக்டோபர் மாதமளவில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஏழுபேர் கைதுசெய்யப்பட்டனர்எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜூலைமாதம் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் தொடர்பான ஏழுதகவல்களும் பொலிஸாரின் தடுப்பில் உயிரிழப்பு தொடர்பான 8 அறிக்கைகளும் கிடைத்ததாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருந்தது. படையினரின் சட்டவிரோத படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பு பொலிஸாருக்குள்ளது,குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணைகளை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள்ளது எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.