உலகெங்கும் வேகமாக பரவிவரும் “கொரோனா” வைரஸின் பரவலால் தற்போது ஏற்பட்டுள்ள கவலையளிக்கும் நிலைமையால், மனித சமுதாயம் எதிர்கொள்ளப்போகும் மோசமான நிலைமை தொடர்பில் ஐக்கியநாடுகள் சபை தனது கவலையை வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து ஐக்கியநாடுகள் சபையின் பொதுச்செயலாளர் “António Guterres” தெரிவிக்கையில், “கொரோனா” பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய நாடுகளில் “கொரோனா” வை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட, ஐக்கியநாடுகள் சபையின் திட்டங்களுக்கு மேலதிக பொருளாதார நிதி தேவைப்படுவதாகவும், செல்வந்த நாடுகள் தற்போதைய அவசர நிலைமையை கவனத்தில் கொண்டு உதவிகளை வழங்க முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம், உலக உணவுத்திட்டம் மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான செயற்திட்டங்களுக்கு இன்னும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், உலகளாவிய ரீதியில் 44.000 பேர் “கொரோனா” வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 20.000 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு, சீனாவில் தொடங்கிய “கொரோனா” பரவல், ஐரோப்பா வழியாக, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளுக்கும் பரவி வருவதாகவும், பாதிப்புக்கள் குறித்து இதுவரை பதிவு செய்யப்பட்ட தகவல்களை விடவும் உண்மை நிலை மிக அதிகமாக இருக்குமெனவும், இதேவேளை, உககெங்கும் இருக்கக்கூடிய ஏதிலிகள் தங்கியிருக்கும் முகாம்களில் நிலைமைகள் மிக மோசமாகும் அபாயம் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.