பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் நேற்றிரவு மன்னம்பிட்டி பாலத்தில் ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், ஒருவரது சடலம் மனம்பிடிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 40 பேர் மனம்பிட்டி மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
.jpg)