மன்னாரில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்!

You are currently viewing மன்னாரில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம்   இன்று திங்கட்கிழமை காலை (30) இடம்பெற்றது.

பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின்  முன்பாக கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும்,

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும்,  புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

இதில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்,  சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply