மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் வட தமிழீழம் .யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களின் நினைவிடத்தில் 15-09-2022 அன்று தொடங்கியது அத்துடன் பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் வரையிலான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியும் அதே நாளில் பொத்துவிலில் ஆரம்பமாகியது
ஏழாம் நாளான இன்று (21-09-2022) ஊர்திப் பவனியானது
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் தேவாலயத்தின் முன்பு ஆரம்பமாகி தியாக தீபத்தின் 7 வது நாள் ஊர்திப் பயணம் மன்னாரின் பல கிராமமக்களுடன் சங்கமித்துள்ளது குறிப்பாக
மன்னார் அரிப்பு கிராமம்
மன்னார் பாலமுனை
மன்னார் பள்ளிமுனை சென். லூசியா தேவாலயம்
மன்னார் கொக்குப்படையான் றோ.க.த.க.பாடசாலை
மன்னார் அரிப்பு கிராமம் என மக்களின் உணர்வுகளோடு சங்கமித்துள்ளது அதேவேளை மன்னாரின் பாடசாலை மாணவ மாணவிகளும் தியாக தீபத்திற்கு உணர்வோடு தமது மலர் வணக்கத்தினை செலுத்தியுள்ளனர்.