மன்னாரில் நடைபெற்ற மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு!!

You are currently viewing மன்னாரில் நடைபெற்ற மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு!!

மன்னார் – விடத்தல்தீவில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு

விடத்தல்தீவு கிராமத்தில் 22.11.2024 மாலை. 3.00 பிரத்தியேக இடத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், உறவுகள் என 29 க்கு மேற்பட்டோர் வருகைதந்திருந்தனர். பொதுச்சுடரேற்றப்பட்டு, பின் ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.மாவீரர்களின் நினைவு சுமந்து உரை நிகழ்த்தப்பட்டது. பின் தேனீர், சிற்றுண்டி வழங்கி வைக்கப்பட்டது. இறுதியாக உலருணவு, பழமரக்கன்று வழங்கிவைக்கப்பட்டது.நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

மன்னாரில் நடைபெற்ற மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு!! 1

 

மன்னார் – பண்டிவிரிச்சானில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர்களின் முதலாவது மதிப்பளிப்பு நிகழ்வானது, 21. 11.2024 மாலை 3 மணிக்கு பண்டிவிரிச்சான் மண்டபத்தில் உணர் வெளிச்சியோடு நடைபெற்றது. 85 க்கும் மேற்பட்ட பெற்றோர் உரித்துடையோரின் பங்குபற்றலுடன் மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டு குழு ஒழுங்கமைப்பில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பெற்றோர்கள் அனைவரும் நினைவுச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி பின் அக வணக்கத்துடன் ஆரம்பமானது.மாவீரர் ஈகங்கள் சுமந்து உரை நிகழ்த்தப்பட்டது.அத்தோடு, நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டு பின் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.உலர்உணவுப் பொதியும், பழமரக் கன்றும் வழங்கப்பட்டது.( தேசி, தோடை, நெல்லி) புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்புடன் இம்மதிப்பளிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மன்னாரில் நடைபெற்ற மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு!! 2

 

மன்னார் – தட்சனார்மருதமடுவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர்களின் இரண்டாவது மதிப்பளிப்பு நிகழ்வானது, 21. 11.2024 மாலை 7.00 மணிக்கு தட்சனார்மருதமடு மண்டபத்தில் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது. 35 க்கும் மேற்பட்ட பெற்றோர் உரித்துடையோரின் பங்குபற்றலுடன் மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டு குழு ஒழுங்கமைப்பில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பெற்றோர்கள் அனைவரும் நினைவுச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி பின் அக வணக்கத்துடன் ஆரம்பமானது.மாவீரர் ஈகங்கள் சுமந்து உரை நிகழ்த்தப்பட்டது.அத்தோடு, நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டு பின் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.உலர்உணவுப் பொதியும், பழமரக் கன்றும் வழங்கப்பட்டது.( தேசி, தோடை, நெல்லி) புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்புடன் இம்மதிப்பளிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மன்னாரில் நடைபெற்ற மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு!! 3

பகிர்ந்துகொள்ள

Leave a Reply