மன்னாரில் மணல் அகழ்வு, காற்றாலைக்கு எதிராக போராட்டம்! 

You are currently viewing மன்னாரில் மணல் அகழ்வு, காற்றாலைக்கு எதிராக போராட்டம்! 

மன்னார் தீவு பகுதியில் இடம் பெற்று வரும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்ற இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.அத்தோடு, மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதியம் 12 மணி வரை பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.மேலும், தனியார் போக்குவரத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷமெழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.இந்தப் போராட்டத்தை தொடர்ந்து கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் ஆகிய வற்றிற்கு எதிராக மக்களிடம் கையெழுத்து பெற்று கொள்ளப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.மன்னாரில் மணல் அகழ்வு, காற்றாலைக்கு எதிராக போராட்டம்!  1மன்னாரில் மணல் அகழ்வு, காற்றாலைக்கு எதிராக போராட்டம்!  2மன்னாரில் மணல் அகழ்வு, காற்றாலைக்கு எதிராக போராட்டம்!  3மன்னாரில் மணல் அகழ்வு, காற்றாலைக்கு எதிராக போராட்டம்!  4
பகிர்ந்துகொள்ள

Leave a Reply