மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனரென சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து சிறீலங்கா காவற்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
குறித்த சம்பவத்தால் நீதிமன்ற சூழலில் பெருமளவான சிறீலங்கா காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.