மன்னார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கடிதம்!

You are currently viewing மன்னார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கடிதம்!

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் மரியராஜ் சிந்துஜா என்ற பெண் மரணமடைந்தமை தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

மரியராஜ் சிந்துஜாவிற்கு நீதி கிடைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் இந்த மரணம் குறித்த விசாரணைகள் மூடி மறைக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

திருமதி மரியராஜ் சிந்துஜா என்பவர் கடந்த மாதம் 9ஆம் திகதி மன்னார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம்  குழந்தை பெற்றுள்ளார்.

11ம் திகதி தாயும் சேயும் நலமாக வீடு சென்றுள்ளனர்.

16ம் திகதி தையல் வெட்டுவதற்காக முருங்கன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

பின்னர் 27ம் திகதி குருதிபெருக்கு காரணமாக இரவு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சேர்ந்துள்ளனர்.

மறுநாள் காலை வரை எந்த வைத்தியரும் அவர்களை பார்வையிடவில்லை.விடுதிக்கு பொறுப்பான வைத்தியர்கள் விடுதியில் இருந்துள்ளனர்.

தாதிய உத்தியோகத்தர் வைத்தியர்களிற்கு அறிவித்தும் அவர்கள் வரவில்லை.

ஆகவே வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் அந்த பெண் மரணமடைந்துள்ளார்.வைத்தியசாலைகளில் இவ்வாறான பொறுப்பற்ற செயல்கள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.அதுவும் இரவுநேரங்களில் இந்த நிலை தொடர்கின்றது.உயிருடன் விளையாடும் அசட்டையீனங்கள் தொடர்கின்றன.

மருத்துவதவறு எனும் சட்டபாதுகாப்பு கவசத்தினால் தினந்தோறும் நாடு தோறும் பலர் பலியாகின்றனர்.

இந்த விடுதிக்கு பொறுப்பாகயிருந்த ஒரு வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஒரு இளம் பட்டதாரி பெண்ணை கொலை செய்துவிட்டனர்.

இவர்கள் இந்த பெண்ணின் மரணத்திற்கு பொறுப்புகூறவேண்டும்.

உயிரோடு உறவாடும் உன்னத பணியை செய்தவர்கள் இப்படி பொறுப்பற்று நடந்து கொள்ளலாமா?

ஏற்கனவேஇந்த வைத்தியசாலையில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த பெண்ணின் உடற்கூற்று அறிக்கை நீpதியாக வெளிவருமா என்ற சந்தேகம் எழுகின்றது.

எனவே இந்த சம்பவத்தினை  திட்டமிட்ட கொலையாகவே கருதுகின்றோம்.

பொறுப்பற்ற உத்தியோகத்தர்கள்  மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply